adalso

adnow

loading...

a ads

dogeminer

Friday 29 December 2017

யோகா என்பது நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு வைக்கும் பயிற்சி ஆகும். ஆனால் காலம் நேரமும் ஓடும் இவ்வாழ்க்கையில் யோகா பயிற்சி என்பது இப்பொழுது எல்லாம் கைவிடப்பட்டுள்ளது.
நீங்கள் காலையில் எழுந்து உங்கள் சோம்பல் தனத்தையும் மீறி யோகா செய்வதற்கென உடை அணிந்து அதை மேற்கொள்ளுவது கடினமாக இருக்கிறது அல்லவா? அதற்கு தான் நாங்கள் உங்களுக்கு உதவப் போகிறோம். எல்லாருக்கும் தெரியும் யோகா நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.5 Yoga Poses Before Getting Out Of Bed
ஆனால் அதை எத்தனை பேர் செய்து பலன் பெறுகின்றனர். சில பேர் மதத்தின் அடிப்படையில் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளுகின்றன. இன்னும் சில பேர் ஒரு மாதம் காலம் செய்து விட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் கொஞ்ச காலம் தொடர்கின்றனர்.
ஆனால் நீங்கள் காலையில் உங்கள் படுக்கை விரிப்பில் இருந்த படியே இந்த யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். யோகா என்பது வெறும் எடையை மட்டுமே குறைப்பதற்காக செய்வதில்லை. இது ஆஸ்துமா, முதுகுவலி மற்றும் மூச்சு விடுதல் பிரச்சினை போன்ற உடல் சார்ந்த நிறைய பிரச்சினைகளை சரிபண்ணுகிறது.
அப்படிப்பட்ட அற்புதமான பலனை தரும் சில யோகா பயிற்சிகளை இக்கட்டுரையில் காண்போம்..

1 நடராஜாசனா (நடனமாடும் நிலை) :

நட-நடனம், ராஜா - அரசன், ஆசனம் - யோகா என்று பொருள். இது ஒரு சிறந்த ஆசனம். இந்த ஆசனம் தண்டுவடத்திற்கு வலிமையும் நெகிழ்வுத்தன்மையும் தருகிறது. மேலும் சீரண மண்டலத்திற்கு உதவி புரிந்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. எனவே இதுவே நீங்கள் முதலில் செய்ய வேண்டிய ஆசனமாகும்.
செய்முறை :
தரை விரிப்பில் முதுகுப்பகுதி தரையில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது உங்கள் வலது முழங்காலை மடக்கி இடது முழங்காலின் மேல் வைக்க வேண்டும். வலது பாதம் சற்று வெளிப்புறமாக இருக்குமாறு வைக்க வேண்டும். பக்கவாட்டில் கைகளை தோள்பட்டையின் உயரத்திற்கு சமமாக நீட்ட வேண்டும்.
மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். மூச்சை வெளியே விடும் போது தோள்பட்டை மற்றும் இடுப்புக்கு இடைப்பட்ட பகுதியை அப்படியே இடது புறம் திருப்பி மற்றும் தலையை வலது பக்கம் திருப்பி வலது தோள்பட்டையை பார்க்க வேண்டும்.
தோள்பட்டை களை தரையில் படும்படி செய்து பின்னர் வலது தொடையை தரையில் படும்படி செய்ய வேண்டும். மேலும் இடது கையை வலது தொடையின் மீது வைத்து கீழே படும் படி செய்ய வேண்டும்.
இதே நிலையில் 3-4 மூச்சுப்பயிற்சி அல்லது உங்களால் முடிகின்ற அளவு வரை செய்ய வேண்டும்.
பிறகு மூச்சை வெளியிட்டு ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளுங்கள்.
இதே பயிற்சியை அடுத்த பக்கம் மாற்றி செய்யவும்.
பயன்கள் :
தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மையும் வலிமையையும் அதிகரிக்கிறது.
இது விலா எலும்புகள் மற்றும் நுரையீரலுக்கு நல்ல பயிற்சியாகும்.
இது பெருங்குடல் செயலை நன்றாக்குகிறது. எனவே இதை காலையில் செய்தால் நல்லது.
குடலியக்கம், சிறுநீர்ப் பை போன்றவற்றின் செயலை சீராக்குகிறது.
சீரண சக்தியை மேம்படுத்துகிறது
மனது மற்றும் மூளையை ரிலாக்ஸ் ஆக்குகிறது.

No comments:

Post a Comment

Apple Cider Vinegar: 10 Home Remedies To Prevent Dark Armpits

Dark underarms are caused mainly due to excessive use of alcohol-based deodorants and whitening creams. There are other factors that can ...