பெரும்பாலும் 90 சதவிகித பேர், காலையில் பல் துலக்கும் பழக்கத்தை தினசரி வைத்திருக்கிறார்கள். ஏனெனில், இதனால் நாம் மிக ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, நாம் பின்தொடரவேண்டிய தேவையான ஒரு பழக்கமாகவும் இது அமைகிறது.
இன்றைய உலகில், தினசரி நம் பற்களை துலக்குவதால் நம் தனிப்பட்ட சுகாதாரமானது மேம்படுகிறது என்பதனை உணர்ந்திருக்கிறோம் என்பதே உண்மை. அத்துடன் பல் இடுக்குகளையும் இது பாதுகாக்கிறது என்பதையும் நாம் அறிகிறோம்.
நீங்கள் தினசரி ஒரு முறையாவது உங்கள் பற்களை துலக்குவதில்லை என்றால்... இதனால், உங்கள் பற்களில் கறைகள் படிய வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. அத்துடன் பற்களின் இடுக்கில் சீமை சுண்ணாம்பு போன்ற பொருளும் சேர்கிறது. இதற்கு முக்கிய காரணமாக, நாம் உண்ணும் உணவின் தேக்கங்கள் சென்று பற்களின் இடுக்கில் சேருவதனாலே என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன், சுகாதாரமற்ற பற்களால் நிறைய பேருக்கு இதய நோய்கள் கூட உண்டாக வாய்ப்பிருக்கிறது. ஆம், நம் வாயில் இருக்கும் பேக்டீரியாவானது, இதயத்தை நோக்கி இரத்தம் மூலம் நகர்ந்து செல்கிறது.
பழங்காலத்தில், அனைவரும் தங்கள் பற்களை பாதுகாக்க வேப்பங்குச்சியை பயன்படுத்தினார்கள். அவர்கள் பல் துலக்கியவுடன், அந்த பொருளை தூர எறிந்து அடுத்து நாள் மற்றுமோர் (கரிஅல்லது வேப்பங்குச்சி) புதிய பொருளை எடுத்து துலக்குவது வழக்கமாகும்.
ஆனால், இன்றோ...நாம் அனைவரும் அவற்றை விலக்கி, டூத் ப்ரெஷ்ஷின் உதவியுடன் நம் பற்களை சுத்தமாக வைத்துகொள்ள ஆசைகொள்கிறோம்.
உங்களுக்கு தெரியுமா? டூத் ப்ரஷ்ஷை தவறாக உபயோகிப்பதனால், உங்கள் உடல் நலத்திற்கு எவ்வளவு கேடுகள் உண்டாகும் என்பது? அப்படி
உண்மை #1:
ஒருவேளை, உங்கள் தோழன், அவன் டூத்ப்ரஷ்ஷை எடுத்துவர மறந்துவிட்டான் என்றால்...ஒருபோதும் உங்கள் டூத்ப்ரஷ்ஷை அவனுக்கு தாரை வார்த்து தந்துவிடாதீர்கள். ஏனென்றால், அவர்கள் வாயில் இருக்கும் நுண்ணுயிரிகள், டூத்ப்ரஷ்ஷிற்கு மிகவேகமாக சென்றுவிட, அதனை நீங்கள் திரும்ப உபயோகிக்கும்பொழுது, பல்வேறு தொற்றுகளால் பாதிக்கப்படுகிறீர்கள்.
உண்மை #2:
நீங்கள் பல் துலக்கும்பொழுது, ஒருபோதும் கழிப்பறையை ப்ளஷ் (Flush) செய்யாதீர்கள். பெரும்பாலானோர் காலை நேரங்களில், அவசர அவசரமாக இவ்வாறு செய்வது வழக்கமாகும். ஏனென்றால், நீங்கள் ப்ளஷ் செய்யும்பொழுது, கழிப்பறையில் இருந்து வரும் தண்ணீர் 3 மீட்டர் இடைவேளையில் இருக்கும் டூத்ப்ரஷ்ஷில் பட, அசுத்தமான தண்ணீர் பட்டு, அது உங்கள் ப்ரஷ்ஷில் தங்கிவிடுகிறது.
உண்மை #3:
உங்களுடைய டூத்ப்ரஷ் தலையை ஒருபோதும் ப்ளாஸ்டிக் தொப்பி அல்லது திசுபேப்பர் கொண்டு மூடாதிர்கள். ஏனெனில், அந்த டூத்ப்ரஷ் முட்களின் மீது ஈரப்பதம் தங்கிவிட, அது தரையை நோக்கி இனப்பெருக்கம் செய்து தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாவை ஏற்படுத்துகிறது.